Type Here to Get Search Results !

கர்நாடக பாஜக அரசைக் கண்டித்து நாளை தருமபுரியில் சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்.

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்ப்பதா? கர்நாடக பாஜக அரசைக் கண்டித்துநாளை தருமபுரியில் சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் அ.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தத் திட்டத்தை துவக்குவதற்கான சட்டப்பூர்வ மற்றும் தார்மீக உரிமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிட மாட்டோம் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ்பொம்மை கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது முற்றிலும் நியாயமற்றதாகும், இந்தத் திட்டத்தின் மூலம் பெருமளவு குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.   நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணீரில் அந்தந்த மாநிலங்களுக்கான அளவு பங்கீட்டு நீரினை பகிர்ந்தளித்துள்ளது.  இதனடிப்படையிலேயே தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை அதாவது பில்லிக்குண்டுவிலிருந்து கீழே கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றும், தமிழக அரசு தனக்குள்ள உரிமையின் படி இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்கவேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 25.1.22 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டுகிறோம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies