Type Here to Get Search Results !

ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லி குடியரசு தின விழாவில் தமிழ் நாட்டின் விடுதலைப் போராளிகளின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

புது தில்லியில் குடியரசு தின விழா பேரணியில் தமிழ்நாட்டின் சார்பில் விடுதலைப் போராளிகளின் அலங்கார வாகனத்தை புறக்கணித்த ஒன்றிய பி.ஜே.பி. அரசை கண்டித்து தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 26 -1- 2020  காலை 10 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக, ம.தி.மு.க ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே 17 ,இயக்கத்தினர் கலந்துகண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.பரமசிவம் தலைமை தாங்கினார்,. மாவட்ட செயலாளர் த.மு.யாழ் திலீபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் .மாநில திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் பாபு சேட்டு,தங்கமணி ,நாட்டான் மாது, ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அ.தங்கராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் வஜ்ரவேல், நகர செயலாளர் வீரமணி, குமரவேல், சிவபாதம், முனி நாதன் ,சேகர், நவாப், கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி ,செய்தி தொடர்பாளர் த.கு.பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜா என்கிற மன்னன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோதன், பெரியார் பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் முனி .ஆறுமுகம், திராவிடர் கழக நிர்வாகிகள் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, பொதுக்குழு உறுப்பினர் இ.மாதவன ,மாவட்ட துணைத் தலைவர் இரா.வேட்ராயன், மண்டல மாணவரணி செயலாளர் மா.செல்லதுரை, மண்டல ஆசிரியரிணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் பூபதி ரஜா, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், நகர தலைவர் கரு.பாலன், மாவட்ட துணை செயலாளர் கு.சரவணன், மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சமரசம், கடத்தூர் ஒன்றிய மாணவரணி தலைவர் ப.பெரியார், மற்றும் மாணவரணி தோழர்கள் முனியப்பன்,பாப்பிரெட்டிப்பட்டி  பழ.சின்னதுரை,கா. காரல்மார்க்ஸ், சாய்குமார், நாச்சியப்பன், அருண், தென்றல்பிரியன், தமிழ்வாணன், வினோத், நிதீஷ்குமார், நபின்சிவி, சண்முகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.                             மத்திய அரசே ,மத்திய அரசே, பறிக்காதே பறிக்காதே மாநில உரிமையை பறிக்காதே, ஒரே நாடு இந்தியா என்னும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை திணிக்காதே,  கூட்டாட்சி தத்துவத்தை தொலைக்காதே, கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை புறக்கணித்த மத்திய மோடி அரசை கண்டிக்கின்றோம், உள்ளிட்ட முழக்கங்களை முழங்கி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies