Type Here to Get Search Results !

தர்மபுரியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இந்தியத் திருநாட்டின் 73-வது குடியரசு தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள். இந்த விழா முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து, கொரோனா நோய் தடுப்பு (கோவிட்-19) அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 காவலர்களுக்கு 2022 -ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்த 101 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., தருமபுரி வட்டாட்சியர் திரு.இராஜராஜன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் மரியாதை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதற்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களின் வீடுகளுக்கு வட்டாட்சியர் நிலையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று மொத்தம் 44 சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies