Type Here to Get Search Results !

வனத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களை பாதுகாக்க சோலார் மின் வேலி அமைக்க சிபிஐ கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகனம்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு தோழர் சஞ்சீவன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் வழக்கறிஞர் சி மாதையன் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். பென்னாகரம் வட்டார செயலாளர் பி முனியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் இல. தர்மராஜா, வட்டநிர்வாக குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிளை மாநாட்டில் நாகனம்பட்டி கிளை செயலாளராக சஞ்சீவன், துணை செயலாளராக முருகன், பொருளாளராக நஞ்சப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர்.

மாநாட்டில், வன விலங்குகளிடமிருந்து வனத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களை பாதுகாக்க சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்,

கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் கிடப்பில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியும்,

பென்னாகரத்திலிருந்து மருக்காரம்பட்டி வரை வந்து செல்லும் அரசு பேருந்தை நாகனம்பட்டி வரை வழித்தடம் நீட்டிப்பு செய்ய வேண்டும்,

 நாகனம்பட்டி கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு முடிவில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies