தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து E.அக்ரஹாரம் மற்றும் பெரமாண்டபட்டி இடையே புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டது, இன்றுடன் ஒரு வருடத்தில் நோக்கி சென்று கொண்டிருக்கிறது மேம்பாலத்திற்கு இடையே ஆபத்தான வளைவுகள் உள்ளது.
இந்த வளைவுகளினால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது, அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்ல பேரமண்டபட்டியிலிருந்து இரவு நேரத்தில் இப்பாலத்தின் வழியாகத்தான் பொதுமக்கள் பயணிக்க வேண்டும்.
அருகிலுள்ள அக்ரஹரம் கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் மேம்பாலத்திற்கு அடியில்தான் பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும் அப்பகுதியில் மின்விளக்கு இல்லாததால் தீப்பந்தத்தை எரிய வைத்து பிணத்தை அடக்கம் செய்கின்றனர்.
விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க ஆபத்தானவளைவு பகுதிகளில் மின் விளக்குகளைப் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)
