கிருஷ்ணகிரியை அடுத்த போலுபள்ளி பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லுரியை இன்று 12-01-2022 புதன்கிழமை மாலை 04-00 மணிக்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் காணொளி கட்சி மூலம் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் R.காந்தி அவர்களின் தலைமை வகித்தார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார், இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர், துறை அலுவலர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
.gif)
