Type Here to Get Search Results !

பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது.

பெருமாள் கோவில்களில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது.  இதன்படி, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் கோவிலில் பெருமாள் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) நடந்தது.

விழாவையொட்டி இன்று அதிகாலை 03.35 மணிக்கு சென்றாய  பெருமாள் உள்பிரகார புறப்பாடு, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதற்கு பிறகு இன்று காலை 6.15 மணி முதல் இரவு 6 மணி வரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 

கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.பக்தர்கள் முககவசம் அணிந்து வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies