கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளரும வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் சிந்தக்கும்மனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பிதிருகுப்பம், ஆனந்தபுரம், எட்டரபள்ளி, மாமிடிகாணபள்ளி, சரவனாபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களில் சென்று தம்மை தேர்தலில் வெற்றி பெறவைத்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அவர்களின் கோரிக்கைளான தார் சாலை அமைத்துத்தர வேண்டும், நெற்களம் புனரமைத்து , தரைப்பாலம் அமைத்துத்தர வேண்டும், எட்ரப்பள்ளியில் முருகர் கோயிலுக்கு ஒரு குளம் வேண்டும், சோலார் மின் கம்பம் அமைத்துதர வேண்டும், தண்ணீர் வசதி செய்துதரவேண்டும், கோவிலுக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மாற்றி அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைகளுக்கான முன் வைத்தனர்.
மனுக்களை பெற்றுகொண்டு அதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேறி தருவதாக உறுதி அளித்தார், இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
.gif)
