இன்று கடத்தூரில் தர்மபுரி ரோடு அரூர் ரோடு கடைவீதி பேருந்து நிலையம் பகுதிகளில்உள்ள தாபா மற்றும் உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.பானுசுஜாதா மற்றும் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
உணவகங்களில் நாள்பட்ட இறைச்சிகள் உபயோகம் கண்டிப்பாக தவிர்க்க படவேண்டும் சமைத்த உணவு மற்றும் சமைத்த இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது. மூலப்பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் காய்கறிகள் தரமானதாகவும் இருக்கவேண்டும். இறைச்சிகளில் செயற்கை நிறமேற்றிகள் அறவே உபயோகப்படுத்தகூடாது எனவும் தன்சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறம் சுகாதாரம் பேணப்படவேண்டும் . பணியாளர்கள் கையுறை,மேலங்கி (ஏப்ரான்) மற்றும் தலையுறை அணிந்திருக்க வேண்டும்.கட்டாயம் கரொனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருத்தல் கட்டாயம் உடன் விதிகளை பின்பற்ற வேண்டும் மேலும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்பாடு அவசியம் என எச்சரிக்கை செய்தனர் .உணவுபாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத இரண்டு உணவகங்களளுக்கு உடனடி அபராதம் முறையே 2000 மற்றும் 3000 விதித்து மேம்பாட்டு நோட்டீஸ் அளிக்கப்பபட்டது. மேலும் உரிமம் இல்லாத உணவகங்களுக்கு உடனடியாக எடுக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டது சுகாதாரம் குறைவாக காணப்பட்ட உணவகங்களுக்கு மேம்பாட்டு நோட்டீஸ் அளித்து உடன் நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பபட்டது. செயற்கை நிறமேற்றி கன்டெயினர், பவுடர் பாக்கட்களையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இறைச்சி சில்லி சிக்கன் மற்றும் துரித உணவுகளில் அறவே செயற்கை நிறமி சேர்க்க கூடாது என எச்சரிக்கப்பட்டது. மளிகை பொருட்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர் பானங்களில் கண்டிப்பாக லேபிள் நடைமுறை பின்பற்ற வேண்டும் என எச்சரித்தார். முககவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலித்து ரசீது வழங்கினார். இது போன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் , உணவு மற்றும் உணவு பொருள் பற்றிய புகார்களுகளுக்கு மாநில வாட்ஸ் அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அல்லாதது வாட்ஸாப் அனுப்பலாம் என நியமன அலுவலர் தெரிவித்தார். உணவகங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.
.gif)
