கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த தேவிர அள்ளி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (61) என்பவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில் பின்புறம் சாராயம் காய்ச்சுவதாக பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை எடுத்து அங்கு சென்ற பாரூர் போலீசார் சாராயம் காய்ச்சிய பழனிவேல் என்பவரை சுற்றிவளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர், மேலும் அங்கு 20 லிட்டர் சாராயம் மற்றும் ஆறு லிட்டர் சாராய ஊரல்கள் அதே இடத்தில் ஊற்றி போலீசார் அழித்தனர் பின்பு பழனிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்
.gif)
