மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார் சமூகநல்லினக்கமேடை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.சிசுபாலன் முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுபேதார்,சமூகநல்லினக்கமேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இ.பி.பெருமாள் ,விடுதலைசிறுத்தைகள் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியசெயலாளர் பொன்.சுரேஷ்,தருமபுரி நகரதுணைசெயலாளர் ஆறுமுக பாண்டியன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரசெயலாளர் ஆர்.ஜோசுபாசு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டசெயலாளர் கே.என்.மல்லையன், சமூகசேவை மைய பொறுப்பாளர் அருட்தந்தை ஜேசுதாஸ்,மக்கள் பாடகர் இளங்கோ ஆகியோர் பேசினர்.
கடந்த மாதம் ஹரித்துவாரில் நடைபெற்ற சாதுக்கள் மாநாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன.இந்தியாவை இந்து நடாக மாற்றவேண்டும் அதற்கு தேவைபட்டால் இன அழிப்பில் ஈடுபடவேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் பேசுவது மதசார்பற்ற அரசியல் சாசனத்திற்கு எதிரானது,கண்டிக்கதக்கது
அதேபோல் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர், எனவே சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் மீதும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
.gif)
