ஒசூரை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? : அமைச்சர் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஓசூரை மையமாக வைத்து தனி மாவட்டம் உருவாக்க அரசு ஆவனம் செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் விளக்கமளித்துப் பேசினார்.
இது குறித்து தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமசந்திரன், ஒசூர் ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மலைகிராமங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவோ, சந்திக்கவோ, மூன்று நான்கு பேருந்துகள் மாற வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கு, வருவாய் துறையில் சாத்திய கூறுகள் இல்லாததால் ஓசூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படாது என்று வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் விளக்கமளித்துப் பேசினார்.
.gif)
