உணவுக்காக அவ்வப்போது வன விலங்குகள் கிராமங்களில் உலா வருவது அப்பகுதியில் வழக்கமான நிகழ்வு, இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன் தொட்டி அருகே புக்கசாகரம் கிராமத்திற்க்கு செல்லும் சாலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி புள்ளிமான் மீது மோதியது.
டிப்பர் லாரி மோதியதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே இறந்தது தகவலை அறிந்து அப்பகுதி வனசரக அதிகாரிகள் இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றினர். டிப்பர் லாரி மோதி இறந்த புள்ளிமான் குறித்து வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)
