தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகள், புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளை புறக்கணிக்கப்பட்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களையும், திமுக நிா்வாகிகளையும் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதை கண்டித்தும், இதற்கு துனையாக இருக்கும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினா் கோவிந்தசாமி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்ட ஆட்சியரின் காரின் முன்பு தா்ணாவில் ஈடுபட்ட அவர் தன்னிடம் தமிழக முதன்மை செயளாலர் இரையன்பு அவர்கள் தொலைபேசியில் பேசி இதற்குன்டான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என தெரிவித்தார்.
காவல் துறை, மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு முன்னால் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் வந்து தர்ணாவில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து சென்றார். அப்போது பேசிய முன்னால் அமைச்சர் அன்பழகன், முதன்மை செயலாளர் அவர்களை நாங்கள் நேரில் சென்று முறையிடுவோம் என தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரமாக ஆட்சியர் காரின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டும் மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தாதது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
.gif)
