Type Here to Get Search Results !

3 நாட்கள் மதுபான கடைகள் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-12 விதியின் படி, 15.01.2022 திருவள்ளுவர் தினம், 18.01.2022 வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் மற்றும் 26.01.2022 குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடி விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவின் படி, எதிர்வரும் 15.01.2022 திருவள்ளுவர் தினம், 18.01.2022 வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் மற்றும் 26.01.2022 குடியரசு தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (TASMAC) மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் (FL-3, FL-3A FL-4A) அனைத்தும் 15.01.2022 (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18.01.2022 (செவ்வாய்க்கிழமை) வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் மற்றும் 26.01.2022 (புதன்கிழமை) குடியரசு தினம் அன்றைய தினங்களில் மூடப்படும் என்றும், இந்த உத்தரவினை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies