ரஞ்சித்குமார் ஆற்றில் மூழ்கியதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராஜா, ரஞ்சித் குமார், இளங்கோவன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கி ரஞ்சித்குமாரை மீட்டனர். உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட ரஞ்சித்குமார் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் ரஞ்சித்குமார் இறந்துவிட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரி ஆற்றில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் ஆற்றில் மூழ்கி இருக்கும் சம்பவங்கள் அதிகளவில் உள்ளது. எனவே உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதியை ஒகேனக்கலில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
.gif)
