Type Here to Get Search Results !

திமுக வேட்பாளர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனை அடுத்து பென்னாகரத்தில் திமுக வேட்பாளர் கலந்தாய்வுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது

இன்று தருமபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பென்னாகரம் பேரூராட்சிக்கான இறுதிகட்ட வேட்பாளர் கலந்தாய்வு கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் .பி.என்.பி.இன்பசேகரன். BE.MBA., Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் Dr.S.செந்தில்குமார் முன்னாள் அமைச்சர் P.பழனியப்பன், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளான ஒன்றிய கழக செயலாளர் C.செல்வராஜ் , பேரூர் கழக செயலாளர் M.வீரமணி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் K.காளியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான த.கார்த்திக் மற்றும்  கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies