காவேரிபட்டினத்தில் இருந்து லாரியில் சேலம் மாவட்டம் மூங்கில் பட்டியைச் சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 37), சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்த ராஜேஷ் (48) ஆகியோர் இருவரும் பால்கோவா ஏற்றுக்கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நேற்று மதியம் தேசிய நெடுஞ்சாலை தடங்கம் பாலத்தின் மீது சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கண்ணன், ராஜேஷ் ஆகியோர் காயமின்றி உயிர்தப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்