ஏரியூர் அருகே உள்ள செல்லமுடி, வடிவேல் கவுண்டனூர், நரசிமேடு பகுதியில் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ் இலக்கியப் பேரவை, தி தகடூர் டைம்ஸ் ஆகியவை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
இதற்கு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர் நா.நாகராஜ் வரவேற்றார். செல்லமுடி அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம். ஜி செங்கோடன் தலைமை வகித்தார்.
மஞ்சார அளவில் ஊராட்சி மன்றத் தலைவர் பெ.மாணிக்கம் முன்னிலையுரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் தலைமையாசிரியர் மா.பழனி , மா.சதாசிவம், இ.டி புஷ்பராஜ், டி.பிரதீப், க.சிதம்பரம், மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்று கிராமப் புற மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் மற்றும் இலவச எழுதுபொருட்கள் வழங்கினர். நிறைவாக கல்லூரி மாணவர் இரா. சக்திவேல் நன்றி கூறினார்.