கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் அதிகமான காவலர்கள் உயிரிழந்து வருகின்றனர்,இதற்கு முக்கிய காரணம் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிர்இழப்பு ஏற்படுகின்றன இதை கருத்தில் கொண்ட ஆயுதப்படை காவலர் கோவிந்தராசு தன்னுடைய சொந்த செலவில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தலைக் கவசங்களை கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் 15 காவலர்களுக்கு தலைக் கவசங்களை இலவசமாக வழங்கினர்.
ஆயுதப்படை காவல் ஆய்வாளர், வாகன பிரிவு காவல் ஆய்வாளர், ஆயுதப்படை காவலர் உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.