அஇஅதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்ன டாக்.எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டடப்படுகிறது, அதனையொட்டி பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஜெயலலிதா,எம்.ஜி.ஆரின் வென்கல திரு உருவ சிலைக்கு பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார், அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சக்திவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, பாலகிருஷ்ணன், சுப்ரமணி, விமலன், சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள் நகர செயலாளர் ராஜா, அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோவிந்தசாமி, கிரிநாத், சோமேஷ் மற்றும் ஏராளமான பெண்களும், நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.
.gif)
