Type Here to Get Search Results !

அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு கடந்த வாரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் அதில் 4600 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் விரிவாக்க திட்டம் தர்மபுரியில் ஆவின் பால் பதனிடும் நிலையம் புதிய சிப்காட் பூங்கா காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பணிகள் குறித்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் கடத்தூர் ஒன்றிய நகரம் சார்பில்  ஒன்றிய பொறுப்பாளர் ஜெகநாதன் நகர பொறுப்பாளர் கேஸ்மணி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்  தீ.முனிராஜ் தலைமையில் கடத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் அன்பரசு விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் வெங்கடாஜலபதி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் ஒன்றிய குழு உறுப்பினர் ராணிஅம்பேத்கர் வழக்கறிஞர் ஸ்டாலின் முன்னாள் நகர தலைவர் மாரிமுத்து தங்கராஜ் முனுசாமி வெங்கடேஷ் சபரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies