நெருப்பூர் அருகே காமராஜ்பேட்டை, தின்ன பெல்லூர், தேங்கல்காடு பகுதியில் சென்னை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், தகடூர் குரல், மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, பென்னாகரம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தமிழ்த்துறை) மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளர்கள் நலச் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் தலைமை வகித்தார்.
தகடூர் குரல் ஆசிரியர் வினோத்குமார் ஆதிமூலம் முன்னிலையுரை வழங்கினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர் நா.நாகராஜ் நோக்கவுரை வழங்கினார். சென்னை திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் பொறுப்பாளர் இல. ஜனார்த்தனன் வாழ்த்துரை வழங்கினார்.
சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் தலைமையாசிரியர் மா. பழனி, தமிழ்ச் சிந்தனைச் சிறகுகள் அமைப்பின் தலைவர் ம.அருள்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிராமப் புற மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கினார்கள். நிகழ்வின் நிறைவில் கல்லூரியின் மின்னணுவியல் துறை மாணவர் கா.பிரசன்னா நன்றி கூறினார். நிகழ்வில் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் விடுதலை விரும்பி , ஆசிரியர் முத்தரசு ஊர்பெரியோர்கள் பங்கேற்றனர்.
.gif)
