அப்போது அந்த வழியே சென்ற பெண் ஒருவர் குழந்தையின் அலறல் கேட்டு கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது பெண் பச்சிளம் குழந்தை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இச்சம்பவம் அந்த கிராமத்தில் காட்டுத் தீயைப் போல பரவி ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடினர் பின்பு அந்த கிராமத்து பெண்கள் அந்த பெண் சிசுவை மீட்டு பாலூட்டி மடியில் வைத்து அந்த குழந்தையின் அழுகையை நிறுத்தினர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேரில் வந்த காவல்துறையினரிடம் அந்த கிராமத்து பெண்கள் குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி காவல்துறையினரிடம் கேட்டனர் ஆனால் காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
நீங்கள் வளர்ப்பதாக இருந்தால் முறையாக காப்பகத்தில் ஒப்படைத்து பின்பு குழந்தையை அரசு விதிமுறைகளின்படி பெற்றுகொள்ளலாம் என்று என்று கிராமத்து பெண்களிடம் போலீசார் கூறினர்.
அதன்பிறகு குழந்தையை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின்பு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தையை ஒப்படைத்தனர்.
.gif)
