தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் தலைவர் பதவி கடந்த 10 ஆண்டுகளாக (தனி) பெண்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது (பொது) பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. நடைபெற உள்ள நகர உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வேடம்மாள், சவுந்தரராஜன், சந்திரமோகன், நகர பொறுப்பாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி வேட்பாளரை தேர்வு செய்தனர்.
.gif)
