கிருஷ்ணகிரி மாவட்டம் 19வது மெகாத்தடுப்பூசி முகாமில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவின்படி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு. கோவிந்தன் வழிகாட்டுதலில், சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா அவர்களின் தலைமையில்,மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன் மேற்பார்வையில் சூளகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட 62 கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இம்முகாமில் மருத்துவர்கள் உதயகுமார், ஷோபபிரியா, எழிலரசு, அயோத்தி பிரக்ருதி, சமுதாய சுகாதார செவிலியர் சியாமளா, பகுதி சுகாதார செவிலியர்கள் கண்ணம்மா, விஜயராணி, லதா மங்கேஷ்கர், வளர்மதி, சுஜாதா, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதுவரையில் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாத வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த 30 பேருக்கு அதிமுக மருத்துவ அலுவலர் ஷோபா பிரியா மற்றும் மாவட்ட நலக்கல்வியாளர் சப்த மோகன் அவர்களின் தலைமையிலும் , ஏ.இசட் ..ப்ளோராவில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சக்தி ,குறள் அரசன் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கம்பனியின் மேலாளர் சுரேஷ் அவர்கள் செய்திருந்தார்.
.gif)
