Type Here to Get Search Results !

தேர்வில் தோல்வியால் விரக்தி கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகள் விஷ்னு பிரியா (வயது.19), இவர் சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார், இந்நிலையில் அண்மையில் கல்லூரியில் நடந்த தேர்வின் முடிவு நேற்று முன்தினம் வெளியானது.

அதில் ஒரு பாடத்தில் விஷ்னு பிரியா பெயிலாகி உள்ளார், இதனால் மனமுடைந்த விஷ்னு பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து  வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தத்தளித்தார் உயிருக்கு போராடிய அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விஷ்னு பிரியாவை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies