Type Here to Get Search Results !

தர்மபுரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்.

தருமபுரி நகராட்சி, புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் தார்சாலை பணியினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் மண்டல பொறியாளர் திரு. இராஜேந்திரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ராசுகுமாரன், முதன்மை பொறியாளர் திரு.ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவணபாபு ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பேருந்து நிலையத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை ஜல்லி,தார் கலவையை தரமாக அமைத்தல், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் மேடு,பள்ளங்களின்றி சமமாக அமைத்தல், மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞர் சங்க செயலாளர் மு.முருகசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் த.காமராசு, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அன்பழகன், சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி, மாநில உழவர் பேரியக்க துணை செயலாளர் ஆர்.கே.சின்னசாமி, மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் தகடூர் தமிழன், நகர செயலாளர்கள் - வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சதிஷ், முன்னாள் நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் அறிவு, நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், நகர பொறுப்பாளர்கள் – கௌரப்பன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies