தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் வேலைக்காக வெளியூர் செல்ல மிகவும் அதிகம் பயன்படுத்தும் கோட்டைகள் பரிசல் துறை இன்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று திரும்பிய பொதுமக்கள் வெளியூர் செல்ல அதிகாலை 5 மணி முதல் பரிசல் துறையில் பயணம் செய்ய துவங்கினர், படகில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஒரு படகில் 4, 5 பரிசில்களை கயிறுகளால் இணைத்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர், விழா காலம் என்பதால் இன்று மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசலில் பயணம் செய்தனர்.
இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் இன்றுவரை அது கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து படகில் சவாரி செய்வது பரிதாபமாக உள்ளது. படகில் சவாரி செய்ய ஒரு நபருக்கு ரூ 15ம், ஒரு இரண்டு சக்கர வாகனத்திற்கு ரூ 30ம் வசூலித்து வருகின்றனர், இந்த ஒட்டனூர்- கோட்டையூர் பரிசல் துறை, கடந்த ஆண்டு ரூபாய் 45 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
.gif)
