கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரது மாந்தோப்பில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வந்து கொண்டிருந்தது. வயலுக்கு வேலைக்கு சென்று அப்பகுதி பொதுமக்கள் 10 நீள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் இந்த மலைப்பாம்பை கொங்கண பள்ளி காப்பு காட்டில் பாதுகாப்புடன் விடப்பட்டனர்.
.gif)
