கிருஷ்ணகிரி ஐந்து ரோடு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்ரீ வி பொதுமக்களுக்கு மக்களுக்கு முக கவசம் கொடுத்தனர் பூ வியாபாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மற்றும் புத்தக விற்பனை கடை நேரடியாகச் சென்று கவசம் கொடுத்து அதன் அதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தற்போது நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் ஒரு முக கவசம் விலை 2 ரூபாய் தான் அணிய மறுத்தால் அபராதம் 200 அதையும் எதையும் கண்டுகொள்ளாமல் சென்றால் மருத்துவ செலவு இரண்டு லட்ச ரூபாய் ஆகும் எனவும் காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பொதுமக்களுக்கு கூறி முக கவசம் கொடுத்தார்.
இந்நிகழ்வில் தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஏடிஎஸ்பி ராஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசு அறிவித்த அனைத்து வழிமுறைகளும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் காவல் துறையினரும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
.gif)
