Type Here to Get Search Results !

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார், இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டிற்கு புல்அறுக்க சென்றார், அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்த சிகாமணி (வயது.22) என்ற வாலிபர் நைசாக மாணவியிடம் பேச்சு கொடுத்து கொண்டுள்ளார், திடீரென மாணவியை இழுத்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சிகாமணி தப்பி ஓடிவிட்டார், இது குறித்து மாணவியின் தந்தை மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார், புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிகாமணியை தேடி வருகின்றனர், கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies