Type Here to Get Search Results !

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க அழைப்பு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான கல்வி உதவித்தொகை போஸ்ட் மெட்ரிக் திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான கல்வி உதவித்தொகை போஸ்ட் மெட்ரிக் திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் (10ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) ஆகிய திட்டங்களின் கீழ் கல்வி நிறுவனங்கள் மூலமாக புதிய மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் முகவரி (escholarship.tn.gov.in) வழியில் பதிவேற்றம் செய்ய 06.01.2022 அன்று முதல் திறக்கப்பட்டு, 10.02.2022 இறுதி நாள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய 1.விண்ணப்பம், 2.சாதிச்சான்று, 3.வருமான சான்று, 4.மதிப்பெண் சான்று, 5.சேமிப்பு கணக்கு புத்தக நகல், 6.ஆதார் எண், 7.வருகை சான்று, 8.தேர்ச்சி பெற்ற நகல் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் escholarship.tn.gov.in கல்வி இணையதள வழியாக விண்ணப்பித்து தருமபுரி மாவட்டத்திலுள்ள மாணவ/மாணவியர்கள் பயன்பெறுமாறும் தெரிவிக்கப்படுகிறது, என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies