Type Here to Get Search Results !

அணையின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த மாணவி தவறி விழுந்து பலி.

திருவண்ணாமலை மாவட்டம், கோவிந்தப்பட்டியை அடுத்த காரியப்பட்டியை சேர்ந்த பூமிநாதன் மகள் செளந்தர்யா (வயது.17 ) இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில்  ப்ளஸ்டூ படித்து வந்தார்.  

கடந்த சில தினங்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெல்ராம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாணவியின் அக்கா, அவரது மாமா, தம்பி ஆகியோருடன் அருகே உள்ள  கேசர்குளி அணைக்கு சென்றுள்ளனர். அங்கு  செளந்தர்யா  அணையின் கரை மீது ஏறி நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளார். 

அப்போது நிலை தடுமாறி   அணையில் உள்ள  தண்ணீர் தவறி விழுந்துள்ளார்.  உடன் இருந்தவர்கள்   செளந்தர்யா நீரில் மூழ்கியது குறித்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கிய மாணவியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.  

சுமார் இரண்டுமணி நேரம் தேடுத்தலுக்கு பிறகு மாணவியை சடலமாக மீட்டு  பிரேத பிரேதபரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies