Type Here to Get Search Results !

ஒட்டப்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது.

தருமபுரி  அடுத்த ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் கடந்த 24-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஷ், இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் அங்கிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஏர்ரப்பட்டி செட்டியூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (30) என்பவர், மாதேஷ் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார், நேற்று ஆனந்தனை கைது செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies