இந்த நிலையில் சுமார் 120 ஏக்கர் நிலத்தை மைலின் என்ற தனியார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க காலையில் பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர், இதனால் தொழிற்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலம் வழங்கியுள்ள நிலையில் 100 விவசாகளின் நிலங்களுக்கு மட்டும் பணம் வழங்கி மீதமுள்ள 60 விவசாயிகளுக்கு நிறுவனம் எவ்வித அனுமதியுள்ளமால் இழப்பீடு வழங்காமல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைப்பதாக இப்பகுதி விவசாயிகள் கூறிவருகின்றனர்.
மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வரை போராட்டம் தொடரவதாக விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குருபரப்பள்ளி போலிசார் விவசாயிகளிடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.