Type Here to Get Search Results !

எருதுவிடும் விழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அமைந்துள்ள கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடத்துவது குறித்து அரசு அதிகாரிகளுடன்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைப்பெறும், இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி அவர்களின் தலைமையில் விழா நடத்துவது  குறித்தும், கால்நடை பாரமரிப்புதுறை , மற்றும் இந்திய விலங்குகள் நலவாரிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்திய நிகழ்ச்சியில் இந்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல், கிருஷ்ணகிரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி மற்றும் தமிழக விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் ஐயூப்கான், ஷோபா , மண்டல இணை இயக்குநர் மற்றும் கால்நடை பாரமரிப்பு துறை இராஜேந்திரன்  உள்ளிட்டோர் கூட்டரங்கில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies