கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முதல் பத்திரிகையாளரும் ஜீவானந்தமே, ஆம், மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன் என்ற நூலை ஜீவானந்தம் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காக அப்போதைய அரசு ஜீவானந்தத்தை கைது செய்தது.கவிதை, கட்டுரை, பாடல்கள் என ஏராளமான நூல்களை எழுதியவர். மேடைப் பேச்சில் ஜீவாவின் பேச்சுக்கள் ஒரு கர்ஜனையாக எதிரொலிக்கும் என அனைத்து கட்சி தலைவர்களிடமும் பாராட்டைப் பெற்றவர். 1963 ஜனவரி 18 ல் ஜீவானந்தம் மறைந்தார்.
ஜீவாவின் 59 ஆவது வருட நினைவு நாள் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரம் பழைய பேருந்துநிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் வட்ட செயலாளர் பி. முனியப்பன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் எஸ். தேவராசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி. மாதையன் ஆகியோர் பேசினார்கள். இதில் வட்டார துணை செயலாளர் சம்பத், நகர துணை செயலாளர்கள் இல. தர்மராஜா, கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்து, லட்சுமிகாந்தன், மாதப்பன், கூத்தப்பாடி ஊராட்சி மன்ற கவுன்சிலர் நாகராஜ், சண்முகம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)
