பின்னர் இதுகுறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் தைதிங்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் முழு நீள கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளதன் அடிப்படையில், தருமபரி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 462 முழுநோ நியாயவிலைக் கடைகளும், 568 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1071 நியாயவிலைக் கடைகளின் மூலம் பயன்பாட்டிலுள்ள 4,60,825 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 718 குடும்பங்களுக்கும் என மொத்தம் 4,61,543 அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முழு நீள கரும்பு, அழகிய துணிபையுடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.24.83 கோடி செலவில் வழங்கப்படுகின்றது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் 1) ஒரு கிலோ பச்சரிசி, 2) ஒரு கிலோ வெல்லம், 3) 50 கிராம் முந்திரி, 4) 50 கிராம் உலர் திராட்சை, 5) 10 கிராம் ஏலக்காய், 6) 500 கிராம் பாசிப்பருப்பு , 7) 100 கிராம் நெய், 8) 100 கிராம் மஞ்சள் தூள். 9) 100 கிராம் மிளகாய் தூள். 10} 100 கிராம் மல்லித்தூள், 11) 100 கிராம் கடுகு, 12) 100 கிராம் சீரகம், 13) 50 கிராம் மிளகு, 14) 200 கிராம் புளி, 15) 250 கிராம் கடலைப் பருப்பு, 16) 500 கிராம் உளுந்தம் பருப்பு. 17) ஒரு கிலோ ரவை, 18) ஒரு கிலோ கோதுமை மாவு, 19) 500 கிராம் உப்பு, 20) ஒரு முழுக் கரும்பு மற்றும் 21) அழகிய துணிப்பை ஆகிய 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு வழங்கப்படுகின்ற பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு நீள கரும்பு, அழகிய துணிபையுடன் கூடிய 21 பொருட்கள் சரியாக இருக்கின்றதா என்பதையும், அப்பெருட்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்பதையும், எடை அளவு குறையாமலும் வழங்குப்படுகின்றதா என்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது தருமபுரி மாவட்டத்தில் 4.61,543 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 04.01.2022 அன்று தொடங்கப்பட்டு இன்று (1001.2022) வரை 2.89,680 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் இன்று (10.01.2022) வரை 45,751 விலையில்லா வேட்டிகளும், 46,169 விலையில்லா சேலைகளும் என மொத்தம் 91,920 விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி மற்றும் செட்டிக்கரை ஊராட்சி இராஜாப்பேட்டை நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியினையும். அப்பொருட்களின் தரம் குறித்தும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற விலையில்லா வேட்டி, சேலைகள் குறித்தும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (10.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு வழங்கப்படுகின்ற பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் முறையாகவும், எடை அளவு குறையாமலும், தரமாகவும் வழங்க வேண்டும் என நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பி.சுப்பிரமணி, திருபி.என் பி.இன்பசேகரன், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் திரு.த.ச.மணிகண்டன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
.gif)
