Type Here to Get Search Results !

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி.

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன், குடிமகள் ஆகியோர் அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை  உணர்த்தும் வகையில்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சாய் சரண் தேஜஸ்வி முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி கடைப்பிடிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர்களுடன் ஏற்க்கப்பட்ட உறுதிமொழியில் தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும், தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டோம், எனவும், அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடன் உண்மையுடன் பணியாற்றுவோம் என்பது கடமையாகும்.

இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுபற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies