20 ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவின்படி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மரு. கோவிந்தன் வழிகாட்டுதலில், சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையில், மாவட்ட நல க்கல்வியாளர் சப்தமோகன் மேற்பார்வையில் சூளகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட 110 கிராமங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இம்முகாமில் மருத்துவர்கள் உதயகுமார், ஷோபபிரியா எழிலரசு , அயோத்தி, பிரக்ருதி, சமுதாய சுகாதார செவிலியர் சியாமளா, பகுதி சுகாதார செவிலியர்கள் கண்ணம்மா, விஜயராணி, லதா மங்கேஷ்கர், வளர்மதி, சுஜாதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி நடைபெறும் முகாம்களுக்கே நேரடியாக சென்று வட்டார மருத்துவர் வெண்ணிலா, மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன், மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் புதிதாக பணியில் சேர்ந்த இடைநிலை சுகாதார சேவை வழங்குனர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதனால் முகாம்களில் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.