Type Here to Get Search Results !

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் - அமைச்சர் உத்தரவு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சி துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று (10.01.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி , இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும் போது தெரிவித்தாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் தடுத்து, மக்களை பாதுகாத்திட தேலையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவரமாக மேற்கொள்வதோடு, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்திட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கோவிட் தொற்றுக்காக 1 தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 9 மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 2250-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் 10 இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் (Covid Care Center) அமைக்கும் பணியும், மேலும், தருமபுரி மாவட்டத்தில் 9 தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை கோவிட் பராமரிப்பு மையங்கள் (ICCC - Integrated Covid Care Center) அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன்.

தருமபுரி மாவட்டத்தில் கோவிட் சிகிச்சை அளிப்பதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 464 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதி இல்லாத 2550 படுக்கை வசதிகளும் என மொத்தம் 3020-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. 

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணையாக 9,15,861 நபர்களுக்கும் (அதாவது 76% நபர்கள்), இரண்டாம் தவணையாக 5,75,257 நபர்களுக்கும் (அதாவது 48% நபர்கள்) செலுத்தப்பட்டுள்ளன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இன்றைய தினம் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்திலும் இன்றைய தினம் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்படுகிறது. இன்றிலிருந்து தருமபுரி மாவட்டத்திலுள்ள முன்கள் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தப்படுகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் (9.01.2022) மட்டும் 43 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 29,161 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 28,733 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 23 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரண பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நபர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். இதைத்தவிர 21 நபர்கள் பிற மாவட்ட மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன் வசதிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவையான அளவு தயார் நிலையில் இருப்பில் உள்ளது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்களும் கொரோனா சிகிச்சை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்ற நோய் தொற்று தடுப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்திட வேண்டும். 

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் போன்ற அதிக பணியாளர்கள் பணிபுரியக்கூடிய இடங்களில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கோரோனா பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், தருமபுரி மாவட்டத்தில் இந்நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, இந்நோய் தடுப்பு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies