Type Here to Get Search Results !

ஆயுட்காலம் காலாவதியான காவல் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

வருகின்ற 24.01.2022-ம் தேதி காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயன்படுத்தப்பட்டு ஆயுட்காலம் காலாவதியான காவல் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தின் போது நான்கு சக்கர வாகனங்களான டெம்போ டிராவலர் வாகனங்கள் நான்கும், டாடா ஸ்பேசியோ வாகனங்கள் ஆறும், பொலிரோ வாகனங்கள் மூன்றும், மகேந்திரா ஜீப் வாகனங்கள் எட்டும், அம்பாசிடர் மற்றும் குவாலிஸ் ரக வாகனங்கள் தலா ஒன்றும், இரண்டு சக்கர வாகனங்கள் 16 -ம் ஆக மொத்தம் 39 வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகிறது. 

இந்த வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்புமுள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே மேற்படி வாகனங்களை தருமபுரி ஆயுதப்படையில் பார்வையிட்டுக்கொள்ளலாம். ஏலதாரர்கள் (4 சக்கர வாகனத்தை ஏலத்தில் கோருபவர்கள் ரூ. 2000/- மும், இரு சக்கர வாகனத்தை ஏலத்தில் கோருபவர்கள் ரூ. 1000/- மும்) முன்வைப்புத் தொகையாக செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், வாகனங்களை ஏலத்தில் எடுப்பவர்கள், ஏலம் முடிந்து 30 நிமிடத்திற்குள்ளாக ஏலத்தொகையை சரக்கு மற்றும் சேவை வரியுடன் (நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும், சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும்) கட்டிவிட்டு ஏலம் எடுத்த வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மறு ஏலம் விடப்படாது.

ஏலத்தின் நடைமுறைகளையும், விதிமுறைகளையும் ஏலத்தில் பங்கேற்போர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏலத்தில் கலந்துகொள்ளும் நபர்கள் யாராக இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies