Type Here to Get Search Results !

பள்ளத்தாக்கில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து.

கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து தமிழகத்திற்கு மக்காச்சோளம் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதிகாலை  பேரிகை வழியாக வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமன் தொட்டி கொண்டை வளைவு பள்ளத்தாக்கில் வந்தபோது இரண்டு லாரிகளும் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிந்தது. 

இதில் இரண்டு லாரிகளும் பள்ளத்தாக்கில் சென்று கீழ்ப்பகுதியில் வந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த டிரைவரும் கிளினரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பிறகு இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேரிகை போலிசார் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் கிளினர்களை 4 பேரையும்  மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies