பில்பருத்தி கிராமத்தில் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி நுட்பம் செய்து காட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பில்பருத்தி கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி நுட்பம் செய்து காட்டுதல் பயிற்சி அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதியமான் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் லக்ஷ்மன் குமார் கலந்துகொண்டு தற்போதைய சூழ்நிலையில் விவசாயத்தின் புகுத்தகூடிய தொழில் நுட்பம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறித்தும், அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் எவ்வாறு வெளிக்கொணர்வது குறித்தும், நடவு செய்தல், நடவு வயல் செய்தல், பயிர் இடைவெளி, உரம் மற்றும் நீர் மேலாண்மை குறித்தும், திருந்திய நெல் சாகுபடி நுட்பம் செய்து காட்டுதல் செய்முறை விளக்கத்தை அங்குள்ள விவசாயிகளுக்கும் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவாக எடுத்துக்கூறி விளக்கினார்.
பின்னர் அதியமான் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த கிரிதர், ரிஸ்வான், தென்னரசு, சஞ்சிவ்குமார், தோழன், விக்னேஷ், குருமூர்த்தி, உசைப் அலி, சந்தோஷ் உள்ளிட்ட மாணவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து நெல் பயிர் வேரினை நனைத்தல் மற்றும் நடவு செய்தல் பணியில் மாணவர்களும் செயல்முறையில் ஈடுபட்டனர்.
