தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை தருமபுரி மாவட்டம் பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு ரேஷன் கடையில், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ், தலைமையில் மேற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் பாபு, செல்வராஜ், பன்னீர்செல்வம், சின்னப்பன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் ராமலிங்கம், குப்புசாமி, முருகன், இளவரசன், மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சையத், கூட்டுறவு சங்க தலைவர் அறிவுமணி, கூட்டுறவு சங்க செயலாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
.gif)
