தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் கடத்தூர் நகரத்தில் முக்கிய வீதிகள் மிகவும் பழுதடைந்த குண்டும் குழியுமாக உள்ளது, தங்கள் பகுதிக்கு தார் சாலை மற்றும் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் , ஒன்பதாவது வார்டு வீர கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் நேற்று தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜெகநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.நெப்போலியன், நகர செயளாலர், நகர பொறுப்பாளர் கேஸ்மணி, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் வழக்கறிஞர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சிவபிரகாசம், உள்ளிட்ட நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)
