பொங்கல் பண்டிகையின் கருநாள் அன்று அசைவ உணவு விரும்பிகள் ஏராளமானோர் உள்ளனர். இந்த சந்தையில் ஆடு, மாடுகள் வரத்து அதிகரித்தது. ஆடு ரூ. 5000 முதல் 25,000 வரை விற்பனை நடைபெற்றது.3000 மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது அதில் வளர்ப்பு கன்று 7,000 முதல் 15000 வரையிலும், பால் மாடுகள் 25000 முதல் 50,000 வரையும், பிற மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில் கேரளா மாநிலத்திற்கு வியாபாரிகள் மூலம் சுமார் ரூ.60 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை நடைபெற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. கரோனா காலகட்டத்தில் இந்த சந்தையில் பொங்கல் முன்னிட்டு ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனைக்கு வந்தது ஆர்வத்துடன் ஆடு மாடுகளை வாங்கிச் செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகளும் வந்திருந்தனர். சுமார் ரூ. 2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என அவர்கள் தெரிவித்தனர். கரோனா காலகட்டத்தில் நடைபெற்ற இந்த சந்தையில் முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அச்சமின்றி பொதுமக்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)
