Type Here to Get Search Results !

எம்.எல்.ஏ., மற்றும் எஸ்.பி., என 210 பேருக்கு கொரோனா தொற்று.

திருப்பத்துார் மாவட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 208 பேரும், இன்று 210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய திருப்பத்துார், தி.மு.க., எம்.எல்.ஏ., நல்லதம்பிக்கு, 46, கடந்த இரண்டு நாட்களாக சளி, இருமலுடன் லேசான காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பரிசோதனை செய்து கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பத்துார் எஸ்.பி., பாலகிருஷ்ணனுக்கும், 49, கொரோனா தொற்று உறுதியானது. அவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies