இந்த ஆண்டு 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் இன்றைய தினம் 29.01.2022 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியான இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில்
நேர்மையுடனும், உண்மையுடனும், பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்" என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருநாரயணன் அவர்கள் வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திருமதி.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் திரு.அய்யப்பன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.சுப்பிரமணியன்: உதவி இபக்குநர் (ஊராட்சிகள்) திரு.சீனிவாச சேகர் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து, கொரோனா நோய் தடுப்பு (கோவிட்-19) அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.